"வானிலை முன்னறிவிப்பில் இந்தியாவுக்கு சிறப்பிடம்" - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பெருமிதம்
புதுச்சேரியில் தேசிய கடல்வள துறை தொழில் நுட்பக் கழகம் சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மணற்பரப்பு மறு சீரமைப்பு திட்டத்தின் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரியில் தேசிய கடல்வள துறை தொழில் நுட்பக் கழகம் சார்பில், 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை மணற்பரப்பு மறு சீரமைப்பு திட்டத்தின் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன், ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன், சுனாமி வருவதை துல்லியமாக கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் தொழில் நுட்பத்தை கொண்ட 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் புயல் உள்ளிட்ட வானிலை அறிவிப்புகளை வெளியிடுவதில் உலக அளவில் 4வது சிறந்த நாடாக இந்தியா உள்ளதாகவும் தெரிவித்தார்.