10 % இட ஒதுக்கீடு மசோதா : குடியரசு தலைவர் ஒப்புதல்

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Update: 2019-01-12 14:30 GMT
நாடாளுமன்ற மக்களவையிலும், மறுநாள், மாநிலங்களவையிலும், 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா  நிறைவேற்றப்பட்டது. எனவே, இவ்விரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா, முறைப்படி, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதை பரிசீலித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, கையெழுத்திட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்