அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன...?
சிபிஐ இயக்குநர் பொறுப்பில், அலோக் வர்மா நியமனம் முதல் பணியிட மாற்றம் வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்..
* 2017 அக்டோபர் 23-ம் தேதி சிபிஐ-யின் சிறப்பு இயக்குநராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்தார்
* நவம்பர் 28-ம் தேதி மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன், அஸ்தானா நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
* 2018 ஜூலை 12-ல் அலோக் வர்மா வெளிநாடு சென்றிருந்தபோது, அவசரமாகக் கூடிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அஸ்தானாவுக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்தது.
* ஆகஸ்ட் 24 சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, மற்றும் சில அதிகாரிகள் மீது, கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஊழல் புகார் அளித்தார்.
* அக்டோபர் 15 ம் தேதி வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக கூடுதல் இயக்குநர் அஸ்தானா மற்றும் சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது
* அக்டோபர் 22 -ல் சிபிஐ கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் தேவேந்திர குமாரை லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ கைது செய்தது
* அக்டோபர் 24 -ல் சிபிஐ கூடுதல் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா பணியிலிருந்து விடுவிக்கப்பட, 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அலோக் வர்மா பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டார்.
* அக்டோபர் 6 -ல் பதவி நீக்கத்தை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 - ஜனவரி 8- ல் அலோக் வர்மாவின் பதவி நீக்கம் செல்லாது என அறிவித்தது.
* ஜனவரி 10 பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு அலோக் வர்மாவை பணிமாற்றம் செய்து உத்தரவு.