மார்ச்சுக்குள் 2 கோடி இலவச கேஸ் இணைப்புகள் - மத்திய அரசு உத்தரவு
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வரும் மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 2 கோடி இலவச கேஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயனடையாதவர்கள் மார்ச் மாதத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆதார், ஸ்மார்ட் ரேஷன் கார்ட், வங்கி பாஸ் புக், 3 புகைப்படங்கள் அடங்கிய ஆவணங்களை அருகில் உள்ள கேஸ் ஏஜென்சியில் வழங்கி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச இணைப்பை பெற முடியும்.