வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை : 2.45 லட்சம் வீடுகள் விற்பனை

கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருந்த நிலையில் 2018-ம் ஆண்டில் முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Update: 2018-12-14 21:38 GMT
இந்த ஆண்டில் வீடு விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், கட்டி முடிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 93 ஆயிரத்து 600 ஆக இருக்கும் என்றும், இது கடந்த அண்டை விட 32 சதவீதம்  அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.டிசம்பர் மாத இறுதி வரை  2 லட்சத்து 45 ஆயிரத்து 500 வீடுகள் விற்பனையாகும் என்கிற எதிர்பார்ப்பினையும்  வெளியிட்டுள்ளது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி போன்றவற்றால் வீடு கட்டித் தரும் நிறுவனங்கள் புதிய திட்டங்களைத் தொடங்குவதில் நெருக்கடி  ஏற்பட்டது என்றாலும், டெல்லி என்சிஆர்,  மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை தற்போது வளர்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.  அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கட்டி முடிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை 41 சதவீதம் அதிகரிக்கும் என்றும்,  செப்டம்பர் மாதம் வரையில், கட்டி முடித்து விற்பனையாகாமல் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 87 ஆயிரமாக  உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் குறைவு என்றும் தெரிய வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்