சபரிமலை விவகாரம் - ரெஹனா பாத்திமா கைது

பெண்ணியவாதியான கேரளாவை சேர்ந்த ரெஹனா பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-11-27 13:20 GMT
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவை தொடர்ந்து, கடந்த மாதம் சபரிமலைக்கு சென்றவர், ரெஹனா பாத்திமா. இவர், முத்த போராட்டம், மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் போன்ற பல சர்ச்சையான விஷயங்களில் சிக்கிய நிலையில், சபரிமலைக்கு சென்றதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், அய்யப்ப பக்தர்கள் தொடர்பாக, தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, கேரள போலீசார், இன்று அவரை கைது செய்தனர். கொச்சியில் உள்ள ரெஹனா பாத்திமாவின் இல்லத்தில் அவரை கைது செய்த போலீசார், பத்தனம் திட்டா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்