சபரிமலை விவகாரம் - அடுத்தக்கட்ட நடவடிக்கை : கேரளாவில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2018-11-14 03:35 GMT
நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். சபரிமலை  விவகாரத்தில் மறு ஆய்வு மனுக்கள் மீது ஜனவரி 22ந் தேதி விசாரணை நடத்த ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்றம், முந்தைய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவில்லை. இதனால், மண்டல, மகர விளக்கு சீசனின்போது, மீண்டும் பிரச்சினை எழாமல் இருக்க எந்தமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து
அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்