பாகிஸ்தான் உளவு பிரிவை சேர்ந்த 2 பேர் கைது
மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் பால்தார்பூர் பகுதியில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் நாக்பூர் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார்
இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, பாகிஸ்தானின் உளவு அமைப்பை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 3 பேர் ஊடுருவியுள்ளது கண்டறியப்பட்டது. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய புலனாய்வு துறையினர் கொடுத்த தகவலின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மும்பை காவல்துறை அதிகாரி "தந்தி டி.விக்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் நாக்பூரில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புக்கு ஸ்லீப்பர் செல் தயார் செய்யும் பணியில்
ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.