ரூ.2.50 கோடி ரூபாய் நோட்டுகளால் பரமேஸ்வரி அம்மனுக்கு தங்க புடவை அணிவிப்பு
ஆந்திராவில் நவராத்திரியையொட்டி அம்மனுக்கு தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அம்மனுக்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தினாலான புடவை மற்றும் 4 கிலோ எடை தங்க நகைகளுடன் மகாலட்சுமி அவதாரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அம்மனை இந்த கோலத்தில் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்ததோடு புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். கடந்த ஆண்டு, இதே அம்மனுக்கு ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.