திருப்பதி ஏழுமலையான் கோவில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு விழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு பெற்றதையடுத்து பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி 4 மாட வீதிகளில் வலம் வந்தார்.

Update: 2018-10-04 02:25 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக்கூடிய மகா சம்ப்ரோசண குடமுழுக்கு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி துவங்கி நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற விழா, மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து மலையப்ப சுவாமி , ஸ்ரீதேவி, பூதேவி உடன், பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நான்கு மாட வீதிகளில் உலா வந்த, மலையப்ப சாமியை, பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்