கடற்கரையில் உலா வரும் ஜெல்லி மீன்கள்
மும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன.
* மும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. இதனால், அங்கு செல்ல, பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
* ஆழ் கடலில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களில், ஜெல்லி மீன்கள், ஆயிரக்கணக்கில், வாழ்ந்து வருகின்றன. இதில், பெரும்பாலானவை கொடிய விஷத் தன்மை கொண்டவை என, விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
* கொடிய விஷத்தன்மை மட்டுமின்றி, மனிதர்களைக் கொல்லக்கூடிய ஜெல்லி மீன் வகைகளும் உண்டு என்கின்றனர்,
ஆராய்ச்சியாளர்கள்.
* கடலின் ஆழமான உள்பகுதியில் வாழும் ஜெல்லி மீன்களானது கடற்கரை ஓரங்களில் அவ்வப்போது கரை ஒதுங்குகின்றன. இதேபோல், மும்பை கடற்கரையிலும் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கத் தொடங்கியுள்ளன. Juhu கடற்கரை, Aksa கடற்கரை, Girgaum Chowpatty மற்றும் Versova கடற்கரைகளில் ஜெல்லி மீன்கள் தென்பட்டதாக, கூறப்படுகிறது.
* ''Blue bottle jelly fish'' என்ற வகை ஜெல்லி மீன்கள் தான் மும்பை, ஜுஹு கடற்கரையில் (Juhu beach) முகாமிட்டுள்ளன. இவ்வகை ஜெல்லி மீன்கள், Portuguese man-of-war என்று கூறப்படுகிறது.
* நீண்ட வால்களைக் கொண்ட இந்த ஜெல்லி மீன்கள், hydrozoan குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மீன் வகைகள் அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல்களில் காணப்படுகின்றன.
* மும்பைக் கடற்கரையில், தற்போது அதிகளவில் ''Blue bottle jelly fish'' காணப்படுகின்றன. அட்டைப்பூச்சி போல் உடலில் ஒட்டிக் கொள்ளும் இந்த ஜெல்லி மீன்கள், ஒரு மணிநேரத்தும் மேலாக நமைச்சல் மற்றும் வலியை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. ஜெல்லி மீன்களால், 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* இந்நிலையில், ஜுஹு கடற்கரைக்குச் செல்லும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி மீன்களின் விஷம், கடலில் வாழும் மீன்களை மட்டுமே கொல்லக்கூடியது என்றும் மனிதர்களைக் கொல்லும் தன்மை இதற்கு இல்லை என்றும், சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.