வருமான வரி தாக்கல் - செய்யக் கூடாதவை...
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கணக்கை தாக்கல் செய்யும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்..
வருமான வரி தாக்கல் - செய்யக் கூடாதவை...
வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கணக்கை தாக்கல் செய்யும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தற்போது பார்க்கலாம்...
* வருமான வரி தாக்கல் செய்த பின்பு அதை சரி பார்த்து உறுதி செய்யாமலிருப்பது.
* விண்ணப்பம் 26ஏஎஸ் மூலமாக டிடிஎஸ் கோரும் போது அது தொடர்பான வருமானம் பற்றிய தகவல்களை குறிப்பிடாமலிருப்பது.
* சேமிப்பு கணக்கின் மூலமாக வரும் வட்டியை வருமானமாக சேர்த்து தாக்கல் செய்யாமலிருப்பது
* கணவன் அல்லது மனைவி மற்றும் 18 வயதிற்கு உட்பட்டவர்களின் வருமானத்தையும் சேர்த்து தாக்கல் செய்யாமலிருப்பது.
* குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கை மட்டும் குறிப்பிட்டு விட்டு மற்ற வங்கிகளில் உள்ள கணக்கு பற்றிய தகவல்களை குறிப்பிடாமலிருப்பது.
* வங்கிகள் தவிர மற்ற வகைகளில் வரும் வட்டி வருமானத்தையும் சேர்த்து தாக்கல் செய்யாமலிருப்பது.
* வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய எல்.ஐ.சி பாலிசிகளின் இரசீதுகளை தாக்கல் செய்யாமலிருப்பது.
* 80G பிரிவின் மூலம் வரி விலக்கு கோரும் போது நன்கொடை பெறுபவரின் பான் எண்ணை இணைக்காமலிருப்பது.
* வட்டி வருமானமானது சேமிப்பு கணக்கின் மூலமாக மட்டும் வரும் பொழுது வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கருதி தாக்கல் செய்யாமலிருப்பது. குறிப்பாக கணவன் அல்லது மனைவியின் சேமிப்பு கணக்கின் மூலமாக வரும் வட்டி வருமானம்.