தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு
விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் கிரண் பேடி பங்கேற்பு
* பிற மொழிகளை கற்றுக்கொண்டாலும் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
* புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்கள் மத்தியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு உரையாற்றினார்.
* இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலர் அஸ்வனி குமார், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
* முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி மாநிலம் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க கூடிய சிறந்த இடம் என்றார். அகில இந்திய அளவில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13வது இடத்தில் உள்ளதாகவும், இது பிற பல்கலைக்கழகங்களுக்கு முன் மாதிரியாக உள்ளதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
* அப்துல் கலாமை போல் மாணவர்கள் பெரிய அளவில் கனவு காண வேண்டும் என்றும், அதை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.