தாம்பரம் - நெல்லை அந்தியோதயா ரயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை - மத்திய அமைச்சர்
தாம்பரம்- நெல்லை இடையிலான அந்தியோதயா ரயில், கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் சார்பில், விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஆயிரத்து 302 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வடமாநிலங்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் இருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தாம்பரம்- நெல்லை இடையிலான அந்தியோதயா ரயில், கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.