மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததற்கு எதிர்ப்பு - திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததற்கு எதிர்ப்பு - சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு.
மேட்டூர் அணை திறக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட் கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவையில் 110 விதியின் கீழ் காவிரி டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பேசினார். அதனைத் தொடர்ந்து குறுவை தொகுப்பு திட்டத்திற்கு அமைச்சர் கள் நன்றி தெரிவித்த பேச சபாநாயகர் அனுமதி அளித்தார்.
அமைச்சர்கள் நன்றி தெரிவிக்க அனுமதி வழங்கினால், தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் அனுமதிக்க வேண்டும் என திமுக உறுப்பினர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதைத்தொடர்ந்து பேசிய எதிர்கட்சிதலைவர் ஸ்டாலின், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார்.
காவிரி விவகாரத்தை ஏன் விரைவாக கையாளவில்லை..
காவிரி விவகாரத்தை ஏன் விரைவாக கையாளவில்லை என தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் கே.ஆர். ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.