சர்வதேச புலிகள் தினத்தையொட்டி, ஒடிசா கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட 13 நாடுகளில் புலிகள் உள்ளன. அழிந்து வரும் புலிகளை பாதுகாக்க கோரி ஆண்டுதோறும் ஜூலை 29ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில், 15 அடி உயர மணல் சிற்பத்தை, பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கியுள்ளார். அதில், புலிகளின் உருவத்துடன், சுற்றுச்சூழலை பாதுகாக்க புலிகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டுள்ளார்.