உலகப்புகழ் பெற்ற டைட்டானிக், அவதார் உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டாவ் காலமானார். அவருக்கு வயது 63.. கடந்த 16 மாதங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த ஜான் லாண்டாவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஹாலிவுட் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான எலி லாண்டாவின் மகனான இவர், தனது தந்தை வழியில் ப்ரொடக்ஷன் மேனேஜராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கி, வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்தார். இந்நிலையில் ஜான் லாண்டாவ்வின் மறைவுக்கு ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.