சத்தமில்லாமல் நடந்து முடிந்த `தளபதி 69' படத்தின் பூஜை

Update: 2024-10-04 13:10 GMT
  • சென்னையை அடுத்த பனையூரில், இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 69' படத்தின் பூஜை நடைபெற்றது. நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால், அவரது கடைசி படமாக தளபதி 69 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நடிகர்கள் பாபி தியோல், நரேன், பிரகாஷ் ராஜ், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜை, சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அரசு ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில், நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் எச்.வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூஜை தொடர்பான நிழற்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், அவை வைரலாகி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்