அக்ஷய் குமாருடன் பைக்கில் செல்லும் சுதா கொங்கரா/இணையத்தில் வைரலாகும் வீடியோ
சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் சுதா கொங்கரா , அக்ஷய் குமாரை வைத்து இயக்கியுள்ளார். சர்ஃபிரா என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படமானது ஜூலை 12-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில், நடிகர் அக்ஷய் குமாருடன் இயக்குனர் சுதா கொங்கரா பைக்கில் செல்வது போன்ற வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. இந்த வீடியோவில் அக்ஷய் குமார் தனது இரு கைகளையும் விட்டு விட்டு பைக் ஓட்டும் நிலையில், பாலிவுட் ரசிகர்கள் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.