வரவேற்பை பெற்று சாதனை படைத்திருந்த "ஸ்குவிட் கேம் 2" தொடர்..

Update: 2024-09-20 05:02 GMT

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்குவிட் கேம் சீசன் 2" குறித்தான முக்கிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்திருக்கிறது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்...

குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாக கொண்டு, திகில் கதைக்களத்துடன், விறுவிறுப்பான திரைக்கதையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது "ஸ்குவிட் கேம்" தொடர்...

நெட்பிளிக்ஸில் அதிகம் பேரை கவர்ந்த "ஸ்குவிட் கேம்"

தென்கொரிய தொடரான "ஸ்குவிட் கேம்"... நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி, அதிக பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்ட தொடர் என்ற சாதனையும் படைத்திருந்தது

டிசம்பர் 26-இல் ரிலீஸாக இருக்கும் "ஸ்குவிட் கேம் - 2"

இந்த தொடரின் இரண்டாம் சீசன் எப்போது வரும் என ரசிகர்கள் பெரும் ஆவலில் இருந்த நிலையில், டிசம்பர் 26 ஆம் தேதி ஸ்குவிட் கேம் சீசன் 2 வெளியாகும் எனவும், 2025க்குள் சீசன் 3 மற்றும் கடைசி சீசனும் வெளிவந்து விடும் என வீடியோ வெளியிட்டு அறிவித்து உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது நெட்பிளிக்ஸ்...

ஸ்குவிட் கேம் - 2" டீசர் - நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அப்டேட்

இந்நிலையில்தான், ஸ்குவிட் கேம் சீசன் 2-வின் சிறப்பு டீசர் நாளை வெளியாகும் என அப்டேட் கொடுத்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம்...

சைலென்ட் மோடில் வெளிவந்தபோதே, நெட்பிளிக்ஸில் அதிக பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்ட தொடர் என்ற சாதனை படைத்த ஸ்குவிட் கேம்.. தற்போது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவரும் சூழலில், ரசிகர்கள் ஆர்வத்தின் உச்சத்தில் உள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்