SK ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்... அயலான் படத்திற்கு...

Update: 2023-09-23 14:47 GMT

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம், பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கூடுதல் நேரம் கிடைத்தால் படத்தின் தரத்தை அதிகரிக்க முடியுமென்பதால், அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அயலான் திரைப்படத்தின் டீசர், அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்