'கங்குவா' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 'சிறுத்தை' சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 10 மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் திரைப்படம் 'கங்குவா'. சென்னை, தாய்லாந்து, கோவா, ராஜமுந்திரி என பல்வேறு இடங்களில் பலக்கட்ட படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோடை வெளியீடாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி இப்படம் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..