"ராஷ்மிகாவுடன் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம்?.. - ஓப்பனாக பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா
நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது குறித்து விஜய்தேவரகொண்டா மனம் திறந்துள்ளார்... இதுகுறித்து அவர் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், பிப்ரவரியில் தான் நிச்சயதார்த்தமோ திருமணமோ செய்து கொள்ளப் போவதில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் இந்த வதந்தியைக் கேட்டு வருவதாகவும் நகைச்சுவையாகத் தெரிவித்தார்...