நயன்தாரா திருமண வீடியோ வெளியிட தடை போட்டது யார் ?

Update: 2024-10-09 08:24 GMT

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உலா வரும் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் 2022ல் நடந்தது..

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடியான இருவரின் திருமணம் மீது திரைத்துறையினர், ரசிகர்கள் என பல தரப்பினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது...

அந்த எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் படி, திருமணத்திற்கென தனி தீம் நிர்ணயித்ததோடு, விருந்தினர்களுக்கும் கலர் தீம் நிர்ணயித்து பிரமாண்டத்தை காட்டினர்..

குறிப்பாக திருமணத்தில் செல்போன், கேமராக்களுக்கு தடை விதித்திருந்தனர்...

இப்படி பிரமாண்டமாக நடந்த திருமணத்தை வீடியோவாக வெளியிடாமல், அதனை நெட்பிளிக்ஸ் தளத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்தது நட்சத்திர ஜோடி... இதுவும் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது..

இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணம் முடிந்து குழந்தைகளுக்கு 2வது பிறந்தநாள் கொண்டாடிய சூழலில், இது நாள் வரை திருமண வீடியோ வெளியான பாடில்லை...

காரணம், இதில் நானும் ரவுடி தான் படத்தில் இருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும், அதன் தயாரிப்பாளரான தனுஷ், படத்தின் காட்சிகளை பயன்படுத்த அனுமதி தராமல் இழுத்தடித்ததே தாமதத்திற்கு காரணம் என கூறப்பட்டது..

இவ்விவகாரத்தை பேச்சுவார்த்தை நடத்தி தற்போது தான் சுமூகமாக முடித்து வைத்ததாக கூறப்படுகிறது..

இந்நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நயன்தாராவின் திருமண டாக்குமெண்டரி ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் ஒளிபரப்பாக இருப்பதாகவும், நெட்பிளிக்ஸில் வரும் தீபாவளி அன்று ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்