இது சைலண்டாக நடந்த திருமணம்...அதிதியை கரம் பிடித்தார் சித்தார்த்

Update: 2024-03-28 05:44 GMT

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், தெலங்கானாவின் ஸ்ரீரங்பூரில் உள்ள ரங்கநாயக சுவாமி கோயிலில், இருவரும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்றதாகவும், விரைவில் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதாரி ஜோடி, தங்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்