கோதாவில் இறங்கிய `மதுரை' குழு.. எரிமலையாய் வெடித்த 'பருத்துவீரன்' சர்ச்சை
'பருத்திவீரன்' பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யார் என்ன பேசினாலும், களத்தில் இருந்த கார்த்தி அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். படத்தை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் வந்தபோதும், கார்த்தியின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற ஒரே காரணத்திற்காக இப்படத்தை அமீர் முடித்து கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பலரிடம் கை ஏந்தி அந்த படத்தை அமீர் முடித்ததாக தெரிவித்துள்ள சமுத்திரக்கனி, பொது வெளியில் தவறாக பேசுவதை இதோடு நிறுத்த வேண்டுமென, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பதில் அளித்துள்ளார்.