அவசரப்பட்டு..ட்ரைலர்..Wanted-ஆ வந்த வம்பு..சிக்கலில் திரையரங்கங்கள் | Tamilcinema
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 19ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகிவரும் சூழலில், விஜய் பேசும் ஆபாச வசனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் 'லியோ' படத்தின் தணிக்கை செய்யாத டிரெய்லரை வெளியிட்ட திரையரங்குகளுக்கு மத்திய தணிக்கை வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்சார் செய்யப்படாத டிரெய்லரை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேள்வி எழுப்பியுள்ள தணிக்கை வாரியம், சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.