ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வெளியே வந்த ராகவா லாரன்சுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பாக சாமி தரிசனம் செய்வது வழக்கம் என்று தெரிவித்தார்.