மனைவியை மீண்டும் திருமணம் செய்த பிரபல நடிகர் - மணப்பெண்ணை அழைத்து வந்த மகள்கள்

Update: 2024-06-26 14:02 GMT

கேரளாவை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் தர்மஜன் போல்காட்டிக்கும் கொச்சியை சேர்ந்த அனுஜா என்பவருக்கும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மனைவியுடன் கொச்சி கொங்கையர்பள்ளியில் உள்ள மகாதேவர் கோவிலுக்கு வந்த தர்மஜன் போல்காட்டி, தன் 2 மகள்களின் விருப்பப்படி முறைப்படி காதல் மனைவியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கொங்கையர்பள்ளியில் உள்ள பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர். இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்