தன்னுடன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்புபடுத்து வதந்திகள் பரவிய நிலையில், இசைக் குழு Bassist மோகினி டே மவுனம் களைத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதியின் விவாகரத்தையும், மோகினி டே விவாகரத்தையும் தொடர்பு படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரவி வந்தன. இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு அப்பா போன்றவர் என்றும், எதிர்மறை கருத்துக்களை பரப்பும் மனிதர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் மோகினி டே வேதனை தெரிவித்துள்ளார்.