பிரபல நடிகையை கெஸ்ட் ஹவுசில் வைத்து 3 ஐபிஎஸ் அதிகாரிகள் செய்த பயங்கரம்.. நடவடிக்கை

Update: 2024-09-16 08:20 GMT

பாலிவுட் நடிகை காதம்பரி ஜெத்வானிக்கு பாலியல் புகார் கொடுத்த விவகாரம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட நடிகை காதம்பரி ஜெத்வானி மும்மையை சேர்ந்த தொழில் அதிபர் மகன் மீது அளித்த பாலியல் புகார் பொய்யானது என போலீசார் அளித்த தகவலின் பேரில் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதுபற்றி ஜெத்வாணி மீண்டும் புகார் அளிக்க கூடும் என கருதப்பட்ட நிலையில்,

மும்பை தொழிலதிபரின் மகன் வேண்டுகோளுக்கு இணங்க ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பிரமுகர் நாகேஸ்வரராவ் மகன் வித்யாசாகர் ஜெத்வாணி மீது நிலமோசடி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து ஆந்திர ஐபிஎஸ் அதிகாரிகள் உத்தரவின் பேரில் விஜயவாடா அழைத்து செல்லப்பட்ட ஜெத்வாணி, கெஸ்ட் ஹவுசில் வைத்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட ஜெத்வாணி கடுமையாக மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உயர் மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெத்வானி துன்புறுத்தலுக்கு காரணமாக இருந்த அப்போதை ஆந்திர டிஜிபி ஆஞ்சநேயலு, விஜயவாடா முன்னாள் காவல் ஆணையர் கிராந்தி ராணாடாடா, துணை ஆணையர் விஷால் குன்னி ஆகியோரை ஆந்திர மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

Tags:    

மேலும் செய்திகள்