இசை துறையில் 40 ஆண்டுகளாக கோலோச்சும் 'இசைக்குயில்'... 6 தேசிய விருதுகளை வென்ற பாடகி 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா'
பின்னணி பாடகி சின்னக்குயில் சித்ரா இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் இசை உலக பயணத்தை ரீவைண்ட் செய்து பார்க்கிறது, இந்த செய்தி தொகுப்பு.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த பின்னணிப் பாடகி சித்ராவை தமிழில் அறிமுகம் செய்து வைத்தவர்... இசைஞானி இளையராஜா தான். தமிழில் அறிமுகமாகிய ஆண்டே... 'சிந்து பைரவி' படத்தில் தாம் பாடிய பாடல்களுக்காக தேசிய விருதை வென்றார்.
இன்று இந்தியாவிலேயே அதிக முறை தேசிய விருது பெற்ற பாடகி என்ற பெருமைக்குரியவராக விளங்குகிறார், இந்த 'சங்கீத சரஸ்வதி'.
மின்சார கனவு படத்தில் இவர் பாடிய மானா மதுர மாமர கிளையிலே பாடலுக்காகவும்.. ஆட்டோகிராப் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காகவும்... அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
மலையாளத்தில் ஜேசுதாஸுடன் இணைந்து பல ஹிட் கொடுத்தவர்... தெலுங்கில் எஸ்பிபி உடன் இணைந்து பல ஹிட்களை கொடுத்தார். தமிழில் மனோ மற்றும் சித்ராவின் இணைந்து பாடிய டூயட் பாடல்கள் அனைத்தும் எவர்கிரீன் ரகம்.
அன்றும் சரி.... இன்றும் சரி... பெண் ரசிகைகளின் உள்ளங்களை கொள்ளை கொண்ட சித்ராவின் காதல் பாடல்கள் ஏராளம்...
பாடகர்கள் உன்னிகிருஷ்ணன் மற்றும் ஹரிஹரனுடன் இவர் உடன் இவர் இணைந்து பாடிய பாடல்கள் சுகமான ராகங்கள்...
எஸ்பிபி உடன் அவர் பாடிய டூயட் பாடல்களில்.... இதயங்களை துள்ள வைப்பவை...
இப்படி காதல்... பந்தம்... உறவு... சோகம்... என சித்ராவின் குரலில் வெளியாகி பாடல்கள் ஒவ்வொன்றும் என்றும் மனதை வருட கூடியவை. இப்படி இசை துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வரும் இசைக்குயில் சித்ராவை இன்று தங்களின் பிறந்தநாள் வாழ்த்து மழையால்... நனைத்து வருகின்றன, அவரது ரசிகர்கள்.