இயக்குனர் ஹரியின் மகன் இயக்கிய படம் யூடியூப்பில் வெளியீடு

Update: 2024-04-03 08:42 GMT

பிரபல இயக்குனர் ஹரி - ப்ரீத்தா தம்பதிக்கு மூன்று மகன்கள் இருக்கும் நிலையில், இவர்களில் மூத்த மகன் ஸ்ரீராம் இயக்குனர் மற்றும் நடிகர் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஸ்காம் இறுதி ஆண்டு படித்து வரும் ஸ்ரீராம் தனது ப்ராஜக்டிற்காக 'ஹும்' என்ற பைலட் (pilot) படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை இயக்கி அதை யூடியூபில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. 

Tags:    

மேலும் செய்திகள்