அஜித்குமார், தனுஷுடன் இணைந்து நடிக்க இருந்த வாய்ப்பு நழுவி போனதாக நடிகர் பரத் நினைவுக்கூர்ந்துள்ளார். இயக்குநர் செல்வராகவன், அஜித்குமார், தனுஷுடன் இணைந்து தன்னை வைத்து படம் உருவாக்க இருந்ததாகவும், ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் கவலை தெரிவித்தார். இது சாத்தியமாகி இருந்தால் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய படமாக இருந்திருக்கும் எனவும், அஜித், தனுஷிடம் நிறைய கற்றிருந்திருப்பேன் எனவும் பரத் குறிப்பிட்டார்.