சென்னையை உலுக்கிய ARR இசை நிகழ்ச்சி.. நடுரோட்டில் கத்தி, கதறிய ஆடியன்ஸ்.."இன்றே கடைசி"

Update: 2023-09-27 05:26 GMT

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ரசிகர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு பதிவு செய்ய இன்று

கடைசி நாள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பனையூரில் கடந்த 10-ஆம் தேதி நடந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக ரசிகர்கள் வந்ததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. ரசிகர்கள் பலரும் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அவ்வாறு இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாத ரசிகர்களுக்கு பணம் திருப்பித் தரப்படும் என்று ஏ.சி.டி.சி. நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல்போன பலரும் மின்னஞ்சல் முகவரிக்கு டிக்கெட்களை ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தனர். குறிப்பாக 7 ஆயிரம் பேர் டிக்கெட்களை ஸ்கேன் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. அவற்றில் முதலில் 3 ஆயிரம் பேரின் மின்னஞ்சலை பரிசீலித்து, ஆயிரம் பேருக்கு பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து அனுப்புவதற்கான இன்றே கடைசி நாள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்