ஆல் ஏரியாவிலும் கில்லி என நிரூபித்த அஜித்குமார்..இணையத்தில் படு வைரலான போட்டோ

Update: 2023-12-15 14:39 GMT

நடிகர் அஜித்குமார் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜ்ஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இதில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் நடிப்பதாக கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில், அர்ஜுன், ரெஜினா உள்ளிட்டோரை அஜித்குமார் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அஜித்குமாரின் போட்டோகிராபி என்ற பதிவுடன் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்