"இந்தி சினிமாவை இந்திய சினிமாவாக பார்ப்பது அவமானம்" - நடிகர் சிரஞ்சீவி
இந்தி சினிமாவை இந்திய சினிமாவாக முன்னிறுத்தப்பட்டது அவமானமாக இருந்ததாக நடிகர் சிரஞ்சீவி பேசிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்தி சினிமாவை இந்திய சினிமாவாக முன்னிறுத்தப்பட்டது அவமானமாக இருந்ததாக நடிகர் சிரஞ்சீவி பேசிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தி மொழி குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் - கன்னட நடிகர் சுதீப் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்த சூழலில், அண்மையில் ஆச்சாரியா பட விழாவில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, 1988ல் விருது விழா ஒன்றில் பங்கேற்க டெல்லி சென்ற போது, விழாவில் பாலிவுட் நடிகர்களின் புகைப்படங்கள் மட்டுமே அதிகளவில் இடம்பெற்றதாகவும், தென்னிந்திய திரையுலகம் சார்பில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். என்.டி.ஆர், சிவாஜிகணேசன் போன்றோர் புகைப்படங்கள் இல்லாதது வருத்தமாகவும், அவமானமாகவும் இருந்ததாக தெரிவித்த சிரஞ்சீவி, தற்போது ராஜமவுலியின் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்கள் தெலுங்கு சினிமாவை பெருமைப்படுத்தியுள்ளதோடு, தன்னையும் பெருமைகொள்ள வைத்துவிட்டதாக நெகிழ்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.