ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகான் விருது - திரைத்துறையினர் பாராட்டு
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகான் விருது - திரைத்துறையினர் பாராட்டு.
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சார்பில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர். ரகுமான், வட இந்தியா, தென்னிந்தியா என்ற பாகுபாடு தேவையில்லை என்றும், ஒற்றுமையே முக்கிய தேவை என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் நாசர், கற்றலுக்காக இசை கல்லூரியை தொடங்கிய ஏ.ஆர். ரகுமானை பாராட்டுவதாக தெரிவித்தார். பின்னர் பேசிய பெப்சி தலைவரும் இயக்குநருமான ஆர்கே செல்வமணி, தமிழ் சினிமாவுக்கு விலாசம் கொடுத்தவர் ஏ.ஆர். ரகுமான் என புகழாரம் சூட்டினார். இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன், ஓடிடி தளங்கள், இந்திய திரைப்படத்துறைக்கு ஏராளமான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.