"எல்லாம் வல்ல இறைவனின் அரியணை கூட நடுங்கும்" - மவுனம் கலைத்தார் AR ரஹ்மான்
சாய்ரா பானு விவகாரத்து கோரியுள்ளதை, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.அவரது ட்விட்டர் பதிவில்,"நாங்கள் எங்களது முப்பதாவது ஆண்டு திருமண நாளை கொண்டாட இருந்தோம். ஆனால், அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது. எல்லாம் வல்ல இறைவனின் அரியணை கூட, பிரிந்த இதயங்களின் கனத்தால் நடுங்கும்...“ என குறிப்பிட்டுள்ளார். “மீண்டும் ஒட்ட முடியாமல் நொறுங்கிய துண்டுகளில் இருந்து, நாங்கள் இருவரும் அர்த்தத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்கையில்,எங்களது தனியுரிமைக்கு மதிப்பளித்த நண்பர்களுக்கு நன்றி" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.