'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை பார்த்து அழுத மத்திய அமைச்சர்

தி காஷ்மீர் ஃபைல்ஸ், படத்தை பார்த்து அழுததாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

Update: 2022-03-16 07:31 GMT
பல்லவி ஜோஷி, அனுபம் கெர், தர்ஷன் குமார், அமான் இக்பால் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில், காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேற்றம் பற்றி காட்சிப்படுத்தி, கதையமைப்புச் செய்துள்ளனர். இந்த படத்தை பார்த்தவுடன் தாம் அழுதுவிட்டதாக மத்திய அமைச்சர் கிரிரராஜ் சிங் தெரிவித்தார். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளிவராவிட்டால், மக்களுக்கு உண்மை தெரியவர வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். முன்னதாக, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்