பழம்பெரும் ஹாலிவுட் நிறுவனமான எம்.ஜி.எம் - ரூ.61,355 கோடிக்கு வாங்கிய அமேசான் நிறுவனம்

பழம்பெரும் ஹாலிவுட் திரைபட தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.எம் நிறுவனத்தை, அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

Update: 2021-05-28 07:21 GMT
பழம்பெரும் ஹாலிவுட் திரைபட தயாரிப்பு நிறுவனமான எம்.ஜி.எம் நிறுவனத்தை, அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.


அசத்தல் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த ஜேம்ஸ் பாண்ட் படமானாலும் சரி...

எம்.ஜி.ஆம் பட நிறுவனத்தின் பட தயாரிப்புகள் உலக அளவில் புகழ் பெற்றவை...

நூறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஹாலிவுட்டில் தொடங்கப்பட்ட எம்.ஜி.எம் நிறுவனம், இன்று வரை திரைபடங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களை வெற்றிகரமாக தயாரித்து வருகிறது.

எம்.ஜி.எம் நிறுவனத்தை, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான் அமேசான் நிறுவனம் 61,355 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

எம்.ஜி.எம் ஸ்டுடியோஸ், ஹாலிவுட் படங்கள், அமேசான் நிறுவனம், ஜெப் பெசோஸ், மீம்கள்

எம்.ஜி.எம் நிறுவனம் கடந்த நூறாண்டுகளாக தயாரித்து வெளியிட்ட ஆயிரக்கணக்கான கிளாசிக் படங்களின் உரிமைகள் இனி அமேசான் நிறுவனத்திற்கு கிடைக்கும்.

அமேசான் நிறுவனத்தின் அங்கமான அமேசான் ப்ரைம் வீடீயோ என்ற ஒ.டி.டி நிறுவனத்திற்கு இந்த திரைபடங்கள் மிகவும் பயன்படும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறியுள்ளார். 


எம்.ஜி.எம் நிறுவனத்தை அமேசான் வாங்கியதைத் தொடர்ந்து, டிவிட்டரில் ஜெப் பெசோஸை கலாய்க்கும் மீமக்ள், கிண்டல்கள் ஏராளமாக பதிவாகியுள்ளது.

எம்.ஜி.எம் நிறுவனம் தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களை தயாரித்து வருகிறது என்பதால், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் நாயகனாக ஜெப் பெசோஸ் நடிக்க உள்ளார் என்றும், மொட்டை தலை வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் மீம்கள் வலம் வருகின்றன.

ஜூலை 5ஆம் தேதியன்று அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து ஜெப் பெசோஸ் விலகி, அவரின் இடத்தில் ஆண்டி ஜெஸ்ஸி பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்