ஈவிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டது முதல் படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது வரை நிகழ்ந்த விபத்துகள்
ஈவிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டது முதல் அது படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது வரை அங்கு பல விபத்துகள் நடந்த வண்ணமாய் உள்ளன.
பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர், பாப்பான்சத்திரத்தில் 2012 ஆம் ஆண்டு ஈவிபி பொழுதுபோக்குப் பூங்கா தொடங்கப்பட்டது. பொழுதுபோக்கு பூங்காவிற்குள் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தொடங்கிய வேகத்திலேயே மூடப்பட்டது. மீண்டும் பொழுது போக்கு பூங்கா செயல்படத்தொடங்கிய போது விபத்துகள் அடித்தடுத்து நடக்கத் தொடங்கின அபியாமெக் என்ற விமான பணிப்பெண் ராட்டினத்தில் இருந்து விழுந்து இறந்து போனார். அதனைத் தொடர்ந்து மூடப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா பின்னர் படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு நடிகைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரஜினிகாந்த் நடித்த காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்து போனார். மற்றொருவர் அங்கு இருந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போனார்.
கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படத்திற்கு கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப் பட்ட போது ராட்சத கிரேன் மூலம் மின்விளக்கு பொருத்தப்பட்டது அப்போது கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் இறந்துபோனார். தற்போது ஈவிபி படப்படிப்பு தளத்துக்கு மிகவும் பரிட்சயமான கமல் நடிக்கும் இந்தியன்2 படப்பிடிப்பின்போது கிரேன் கவிழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்