மார்பக புற்றுநோய் என்பது குணமாகக்கூடிய ஒரு நோய் - வரலட்சுமி சரத்குமார்

உடலின் ஓர் அங்கம் தான் மார்பகம் என்றும் மார்பகத்தில் உள்ள பிரச்சினை குறித்து கூச்சப்படாமல் வெளியே சொல்ல வேண்டும் என்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-01 09:56 GMT
உடலின் ஓர் அங்கம் தான் மார்பகம் என்றும், மார்பகத்தில் உள்ள பிரச்சினை குறித்து கூச்சப்படாமல் வெளியே சொல்ல வேண்டும் என்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலைய வளாகத்தில், விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த வரலட்சுமி மார்பக புற்றுநோய் என்பது குணமாகக்கூடிய ஒரு நோய் என்றும், முறையாக சிகிச்சை பெற்றாலே போதும் என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்