சட்டவிரோத காவலில் "தொரட்டி" பட கதாநாயகி : பொள்ளாச்சி காவல் நிலையம் பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத காவலில் உள்ள "தொரட்டி" பட கதாநாயகியை ஆஜர் படுத்தக்கோரிய வழக்கில், பொள்ளாச்சி காவல் நிலையத்தினர் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-30 11:45 GMT
ஷமன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள "தொரட்டி" படத்தின் கதாநாயகி சத்தியகலா திடீரென காணாமல் போனதால், படத்தின் விளம்பர பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கதாநாயகியை ஆஜர்படுத்த கோரியும், பட தயாரிப்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், மனுவில் பெற்றோரின் சட்டவிரோத காவலில் கதாநாயகி சத்தியகலா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பதிலளிக்க, பொள்ளாச்சி காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.  
Tags:    

மேலும் செய்திகள்