கோலிவுட் நோக்கி வரும் பாலிவுட் பிரபலங்கள்...!

தென்னிந்தியாவில் மையம் கொண்டு வரும், பாலிவுட் புயல்களின் வருகை குறித்து விவரிக்கிறது.

Update: 2018-10-13 10:11 GMT
* இங்கிருந்து வடக்கே போவதும், அங்கிருந்து இங்கே வருவதும் சகஜம் தான்... வடக்கு- தெற்கு என்று பேசும் காலம் மாறிப் போய், தற்போது, 'இந்திய சினிமா'வாக பரிமாண வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. 

* `சர்ஃப்ரோஷ்' திரைப்படத்தில் தீவிரவாதியாக நடித்து பாலிவுட்டில் தம்மை நிலை நிறுத்தியவர் நவாஸுதின் சித்திக்......  `கார்பன்', `ஜீனியஸ்', `பதல்பூர்' ஆகிய படங்களில் ஒரு சிறந்த நடிகராக அடையாளப்படுத்திக்கொண்ட இவர், ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிவரும் `பேட்ட' படத்தில் நடிக்கிறார். 

* `உயர்ந்த மனிதன்' என்ற படத்தின் மூலம், அமிதாப் பச்சன் தமிழுக்கு வருகிறார். இதில், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. 

* சோனம் கபூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் `தி சோயா ஃபேக்டர்' எனும் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில், வெளியாகிறது. தென்னிந்திய ரசிகர்களுக்காக, சோனம் கபூருக்கு ஜோடியாக துல்கர் சல்மானைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

* 2000-ம் ஆண்டு வெளிவந்த `ஹே ராம்' படத்தில், மகாத்மா காந்தியாக நடித்தவர் நஸ்ருதீன் ஷா. தற்போது அறிமுக இயக்குநர் பிரகாஷ் தேவராஜ் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் இவருக்கு வில்லன் கதாபாத்திரம்... 

* அஜித் உடன் நடித்த விவேக் ஓபராய் விவேகம் படத்தில், 'தட்    ஸ் மை ஃபிரெண்டு ஃபார் யூ' என்று பேசி அசத்தியிருப்பார். பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபர்' எனும் படத்தில் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறார், விவேக் ஓபராய். இதில் மோகன்லால், கதாநாயகனாக நடிக்கிறார். 

* `நண்பன்' படத்தின் வைரஸ், `வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் வரும் டீன் வேடங்களில் அசத்திய நடிகர் போமன் இராணி, தமிழுக்கு வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மற்றும் சாயிஷா நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதில், மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி மற்றும் பலரும் நடிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்