நீங்கள் தேடியது "tn government"
16 Oct 2018 2:22 PM IST
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நியமனம் : மூத்த வழக்கறிஞர் நடராஜன் நியமித்து உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் ஆஜராவதற்கு, தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜனை தமிழக அரசு நியமித்துள்ளது.
16 Oct 2018 2:16 PM IST
பன்றிக்காய்ச்சல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - அன்புமணி அறிக்கை
பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2018 4:22 PM IST
கொரட்டூர் ஏரியில் 50 ஏக்கர் அரசு நிலம் மீட்பு
சென்னை கொரட்டூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதன் மூலம் அரசுக்கு சொந்தமான 350 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
15 Oct 2018 11:00 AM IST
பத்திரப்பதிவில் முறைகேடை தவிர்க்க பட்டா கட்டாயம் - தமிழக அரசு திட்டம்
பத்திரப்பதிவில் முறைகேடுகளை தவிர்க்க, பட்டா கட்டாயம் என்ற நடைமுறையை செயல்படுத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
14 Oct 2018 5:04 PM IST
ரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பான அரசாணைக்கு எதிர்ப்பு : மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்
இரத்த பரிசோதனை நிலையங்கள் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
12 Oct 2018 8:44 AM IST
"நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்களாக இருந்தாலும், அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
11 Oct 2018 3:44 PM IST
"பாலாறு வெடிவிபத்தில் இறந்த உளவாளிகள் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்" - வீரப்பன் மனைவி
வீரப்பனை பிடிப்பதற்காக, காவல்துறையின் உளவாளியாக செயல்பட்ட சண்முக பிரியாவுக்கு, அரசு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கினால், பாலாறு பாலம் வெடிவிபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
11 Oct 2018 9:55 AM IST
"யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல" - உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
யானைகள் நாட்டில் வாழும் உயிரினம் அல்ல என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
11 Oct 2018 8:52 AM IST
மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு, ஸ்டாலின் கண்டனம்
முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என அமைச்சர் கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 Oct 2018 8:20 PM IST
புதிய தலைமை செயலக வழக்கு: பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட வழக்கில், நீதிபதி ரகுபதி ஆணையத்தின் ஆவணங்கள் எப்போது அரசுக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து நாளை மறுநாள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2018 5:52 PM IST
"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை
"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
8 Oct 2018 4:23 PM IST
"திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்?" தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.