"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை
"பவர் பத்திரப் பதிவு" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
* ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்க, இன்னொரு நபருக்கு அதிகாரம் அளிக்கும் முறை பவர் பத்திரப்பதிவு முறை எனப்படுகிறது.
* இதன்படி, முதல்வர் என்றழைக்கப்படும் சொத்தின் உரிமையாளர், முகவர் என்று அழைக்கப்படும் இன்னொரு நபருக்கு தனது சொத்தை விற்பதற்கான உரிமையை தரலாம்.
* அந்த முகவர் பத்திரப் பதிவு செய்யும் போது, தனக்கு உரிமை அளித்தவர், "உயிருடன் உள்ளார்" என்ற ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
* பத்திரப் பதிவுக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும் முப்பது நாளுக்கு முன்னர், இந்த ஆவணமும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என 2013-ல், பத்திரப் பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்தது.
* ஆனால், முதல் நபர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, பத்திரப் பதிவு செய்யும் தேதியன்று பெற்று வழங்க வேண்டும் என பதிவு அலுவலர்கள் சொல்வதாகவும், இதனால் சிரமம் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.
* இந்நிலையில், அதற்குறிய விளக்கத்தை பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது. பத்திரப் பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முன் 30 நாட்களுக்குள் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 30 நாட்களுக்கு முன்பாக சான்றிதழ் பெறப்பட்டிருந்தால், அது செல்லாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story