நீங்கள் தேடியது "Sport News"
17 Sept 2019 3:44 AM IST
"முன்னாள் காவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம்" - தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது"
ஓய்வு பெற்ற பிறகு, அரசு குடியிருப்பில் 15 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் வசித்து வரும் முன்னாள் காவல் உதவி ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
17 Sept 2019 3:39 AM IST
"விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" - அமைச்சர் வேலுமணி
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 3:22 AM IST
அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் கூட்டம் : பக்தி பாடலுக்கு சாமி ஆடிய பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அம்மன் பக்திபாடலுக்கு ஆண்களும், பெண்களும் பக்தி பரசவத்தில் சாமி ஆடினர்.
17 Sept 2019 3:19 AM IST
ஹெல்மெட் - 2 நாளில் 1.18 லட்சம் பேர் மீது வழக்கு
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
17 Sept 2019 3:16 AM IST
"தமிழர்கள் ஆயுதம் ஏந்த சிங்கள சமூகமே காரணம்" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கருத்து
இலங்கையில் தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதற்கு சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என வடக்கு மகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 3:13 AM IST
ரூ.10 லட்சம் மதிப்பிலான கடத்தல் மருந்துகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை
கம்போடியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உடல் கட்டமைப்புக்கான மருந்து மற்றும் மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
17 Sept 2019 3:08 AM IST
"தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் அமித்ஷா கூறினார்" - ஹெச்.ராஜா
தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பல்வேறு மொழி இருந்தாலும் தாய் மொழிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் அமித்ஷா பேசினார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
17 Sept 2019 3:05 AM IST
ரோந்து பணியின்போது உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் : சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
சிதம்பரத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
17 Sept 2019 3:01 AM IST
ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை தடுக்க சிசிடிவி கேமிராக்கள்
ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதை, தடுக்க தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல்லில், ஜவ்வரிசி ஆலைகளை கண்காணிக்க, சிசிடிவி கேமிரா கண்காணிப்பு மையம் திறக்க பட்டுள்ளது.
17 Sept 2019 2:58 AM IST
கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு
ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2019 2:53 AM IST
"சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்
சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
17 Sept 2019 2:50 AM IST
லஞ்சம் : நகர் ஊரமைப்பு துணை தலைவர் சிக்கினார் - மறைந்திருந்து பிடித்த லஞ்ச ஒழிப்புதுறை போலீசார்
வேலூர் அண்ணா சாலையில் உள்ள நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.