கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு

ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு - புதிய மீன்பிடி வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு
x
ராமநாதபுரத்தில் மீன்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன் பிடிப்பதற்கான வரைவு சட்டம், குறித்து விவாதம் நடைபெற்றது. ஆனால் இத்திட்டத்தில், மீன் பிடிக்க கட்டுப்பாடு இருப்பதால், மீன்பிடி தொழில் அழிந்து போகும் என மீனவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள சட்டமே தொடர வேண்டும் என்றும்  வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்