"எங்களுக்கும் கார் கொடுங்க".. கோரஸாக கேட்ட எம்எல்ஏக்கள் - அமைச்சர் ஐ பெரியசாமி பதில் - குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர்
- தங்களுக்கும் கார் வழங்க வேண்டும் எம்எல்ஏக்கள் கோரஸாக கேட்டதற்கு, அமைச்சர் ஐ. பெரியசாமி கூறிய பதில் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
- மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் பதிலுரை வழங்கிய ஐ.பெரியசாமி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு கார் வழங்கவுள்ளதாக கூறினார்.
- அப்போது, தங்களுக்கும் கார் வழங்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரஸாக கேட்டனர்.
- அதற்கு, உங்களுக்குமா என்று அமைச்சர் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
- பின்னர் பேசிய அமைச்சர், மனது கடலைப் போல விரிந்திருப்பதாகவும், நிதி ஆதாரம் தான் சுருங்கி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.